சர்வதேச நாணய நிதியத்தை நாட திட்டம்!

Mayoorikka
3 years ago
சர்வதேச நாணய நிதியத்தை நாட திட்டம்!

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்வதற்கு ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடமாட்டோம் என அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது உறுதி செய்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரமன்றி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் பொருளாதாரத்தை சீர்செய்வதற்கான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!