இலங்கைக்கான விமான சேவையை நிறுத்திய குவைத் எயார்வேஸ்
Prathees
3 years ago
ஆசிய பிராந்தியத்தில் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான குவைத் எயார்வேஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
அதிகாரபூர்வ காரணம் எதுவும் தெரிவிக்காமல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக அதே விமான நிறுவனத்தால், வாரத்திற்கு இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன.
இலங்கைக்கு வருவதற்கான கட்டணத்துடன் ஒப்பிடும் போது விமான சேவையை தெரிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்