எல்லையைத் திறந்துவிடுங்கள் - சீனாவிடம் கோரும் வியட்நாம்

சீனா அதன் எல்லையைத் திறக்க வேண்டும் என்று வியட்நாமின் வர்த்தக அமைச்சு பெய்ச்சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனா COVID-19 முற்றிலும் துடைத்தொழிக்கும் நடவடிக்கையைப் பின்பற்றுகிறது, அதனால் அங்குக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.
அதனால் வியட்நாமின் வர்த்தகத்திற்குப் பெரும் அடி விழுந்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக வியட்நாமைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் சீனாவின் எல்லையில் பொருள்களுடன் காத்திருக்கின்றன.
சீனாவின் குவாங்சி மாநிலத்தில் COVID-19 நோய்த்தொற்று சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதனால் இப்போது கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அது வியட்நாமிற்குக் கூடுதல் கவலையைத் தந்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாடுகளால் இரண்டு தரப்புகளிலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வியட்நாம் தெரிவித்தது.
வியட்நாமின் பெரிய வர்த்தகப் பங்காளிகளில் சீனாவும் ஒன்று.
சீனாவிற்குப் பெரிய அளவில் காய்கறிகளையும் பழங்களையும் வியட்நாம் ஏற்றுமதி செய்கிறது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



