இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நீ தான் ஸ்பெஷல்...!

நேசித்த பொருள்
கிடைப்பதை விட
கிடைத்த
பொருளை நேசி...!

ஏனென்றால்,
நீ நேசித்த பொருள்
உனக்கு ஸ்பெஷல்
ஆனால்,
கிடைத்த பொருளுக்கு

நீ தான் ஸ்பெஷல்...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-சமாளிப்பு 

முள்ளு குத்திவிட்டது என்று
சொல்பவர்கள் தான் அதிகம்.
முள்ளை என் காலால் மிதித்து
விட்டேன் என்று சொல்பவர்கள்
குறைவு.

தவறு செய்பவர்கள் அதை ஏற்றுக்
கொள்வதை விட அதை
சமாளிக்கவே செய்கிறார்கள்...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கடவுள்

இரு கரம் கூப்பி கடவுளை வணங்குவதை
விட, பசி என்று ஒரு கரம் நீட்டு்
மனிதனின் பசியை போக்கிப்பார்.
அவனுக்கு நீதான் கடவுள்!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கனவு

எதுவும்
கையில் கிடைப்பதற்கு
முன்பே, கனவுகளை
வளர்த்துக் கொள்ளாதே

கையில் கிடைத்தவையே
இந்த உலகில்
நிரந்தரம் இல்லை!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பெண்

கணவனை இழந்தவளுக்கு
விதவை பட்டம்....
மனைவியை
இழந்தவனுக்கு
மறுமணம்....!
மதி்த்திடு
பெண் காற்றில் பறக்கும்
காகிதப்பு அல்ல....
மதுவை எரித்த மத்தாப்பு....!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4