உலகம் முழுவதும் 6,000 விமானங்கள் அதிரடியாக ரத்து.. வெளியான பரபரப்பு தகவல்..!!!!

Keerthi
3 years ago
உலகம் முழுவதும் 6,000 விமானங்கள் அதிரடியாக ரத்து.. வெளியான பரபரப்பு தகவல்..!!!!

உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் பதிவாகி கொண்டே வருகிறது. அதேபோல் உலகம் முழுவதும் 'ஒமிக்ரான்' பரவல் எதிரொலியால் விமான சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் ( டிசம்பர் 24 ), கிறிஸ்துமஸ் ( டிசம்பர் 25 ), கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் ( டிசம்பர் 26 ) உள்ளிட்ட மூன்று நாட்களில் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது விமான ஊழியர்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ, ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். இதுபோன்ற பிரச்சனைகள் காரணமாக விமான ஊழியர்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. எனவே அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து என உலகம் முழுவதும் மொத்தம் 6,000 விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!