மற்றொரு எரிவாயு வெடிப்புச் சம்பவம்
#Police
Prathees
3 years ago
பொகவந்தலாவ, சப்பல்டன் தேயிலை தோட்டத்திலுள்ள வீடொன்றின் சமையலறையிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெடித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது பலத்த சத்தத்துடன் எரிவாயு அடுப்பு வெடித்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிவிபத்தால் எரிவாயு அடுப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டது, வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து இந்த எரிவாயு சிலிண்டரை வாங்கியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வெடிப்பு சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்