அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு
#world_news
#United_States
Mugunthan Mugunthan
3 years ago

டென்வர் பெருநகரப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சந்தேக நபரும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், முதலில் மூவரும், மற்றொரு இடத்தில் மற்றொருவரும் கொல்லப்பட்டனர்.
பின்னர் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.



