எரிவாயு தட்டுப்பாடு! காரணம் வெளியிட்ட அமைச்சர்
Mayoorikka
3 years ago
சமையல் எரிவாயுக்களின் தரம் தொடர்பில் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, சமையில் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடுக்கு நுகர்வோரின் பாதுகாப்பும் ஒரு காரணம் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சமையில் எரிவாயுக்கள் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, சந்தைகளுக்கு விநியோகிக்கும் வரையில் நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையினர் அது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
நாட்டில் தற்போது சமையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பு அதிகக் கவனம் செலுத்தப்படுவதும் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்றார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய அந்த நிறுவனங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.