பேருந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு?

Prabha Praneetha
3 years ago
பேருந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு?

நாட்டில் அண்மைக்காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 2 ரூபாயாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் தற்போது 14 ரூபாயாக காாணப்படும் நிலையில், 2 ரூபாய் அதிகரிப்பையடுத்து, 16 ரூபாயாக அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, பேருந்து கட்டண திருத்தம் நாளைக்குள் அறிவிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அனைத்து செலவினங்களையும் கருத்திற்கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்ளும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!