திருமண அல்பம் சேதமடைந்ததால் மீண்டும் திருமணம்
Keerthi
3 years ago

மலேசியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது திருமண அல்பம் சேதமடைந்ததால் மீண்டும் திருமணம் செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வீடியோவொன்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளமொன்றில் குறித்த பெண்ணின் திருமண வீடியோ மற்றும் அல்பம் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது திருமண நிகழ்வு குறித்த பதிவுகளை சேகரிக்க இரண்டாவது முறையாகவும் திருமணம் செய்யவுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கமொன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



