கட்டுநயாக்க விமான நிலையத்தில் பல இலட்சம் பெறுமதியான அந்நிய செலாவணி மீட்பு!
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறவிருந்த ஏழு பயணிகளிடமிருந்து 65 மிலியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்க டொலர்கள், யூரோக்கள் மற்றும் பவுண்ட் ஸ்டெர்லிங் உட்பட மொத்தம் 65 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள நாணயங்களை, பயணிகளின் பொதிகளுக்குள் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்திருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் வெளிநாட்டு நாணயங்களை சுங்க திணைக்களத்திற்கு அறிவிக்காமல் நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக இலங்கை சுங்கப் பேச்சாளர் சுதத்த டி சில்வா தெரிவித்துள்ளார்
இந்த கடத்தல் தொடர்பாக விசார சுங்கப் பிரிவினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.