அரசிலிருந்து யார் வெளியேறினாலும் ஆட்சி கவிழாது! - ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் திட்டவட்டம்

Reha
3 years ago
அரசிலிருந்து யார் வெளியேறினாலும் ஆட்சி கவிழாது! - ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் திட்டவட்டம்

"அரசில் இருந்து எவரும் விலகிச் செல்ல முடியும். அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை. எனினும், யார் வெளியேறினாலும் அரசை விழ இடமளிக்கமாட்டோம்." - இவ்வாறு ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"யார் வெளியேறப் போகின்றார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதை அவர்களிடம் கேட்க வேண்டும். யாருக்கும் ஒதுங்கிச் செல்லமுடியும்.

அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை.

அவர்கள் வெளியேறினாலும் அரசு வீழ இடமளிக்க மாட்டோம். எமது பக்கமிருந்து யாராவது சென்றால் எதிரிணியில் இருந்து எமது தரப்புக்குச் சிலரை எடுப்போம்.

கொரோனா காரணமாக நாங்கள் மெதுவாகப் பயணித்தாலும், அரசுக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!