மீண்டும் மைக்கை பிடிக்க வருகிறார் மோகன்

#TamilCinema #Actor
Prasu
4 years ago
மீண்டும் மைக்கை பிடிக்க வருகிறார் மோகன்

நடிகர் மோகன் பல வெற்றிவிழா திரைப்படங்களை கொடுத்தவர். இவர் படங்களில் கண்டிப்பாக இவர் பாடகராக நடித்து விடுவார். இதையடுத்து இவர் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார். 

இவரது நடிப்பில் வெளியான படங்கள் இசைஞானியின் கைவண்ணத்தில் சிறப்பான வெற்றியை பெற்றன. 

குறைந்த பட வாய்ப்புகள் மிகவும் சிறப்பான படங்களில் நடித்த மோகன், ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து வீட்டில் முடங்கினார். 

ஹீரோ பட வாய்ப்பிற்காக தொடர்ந்து காத்திருந்தார். ஆனால் இவருக்கு கேரக்டர் ரோல்களே கிடைத்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது சாருஹாசன் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான கேங்ஸ்டர் படமான தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

தற்போது பப்ஜி மற்றும் பவுடர் என இரண்டு படங்களை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீ ஜி. மோகனை இயக்கும் விஜய் ஸ்ரீ ஜி இதில் பவுடர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த இரு படங்களுக்கு பிறகு நடிகர் மோகனை இயக்கவுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. உறுதிப்படுத்திய இயக்குநர் சமீபத்தில் மோகன் மற்றும் விஜய் ஸ்ரீ ஜி இணைந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது மோகனை வைத்து படம் இயக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. மேலும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் ஜனவரி 1ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பிப்ரவரியில் சூட்டிங் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் துவங்கவுள்ளதாகவும் படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு விரைவில் இறுதிப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பலரது கனவு நாயகனாக திகழ்ந்த மைக் மோகன், மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளது கண்டிப்பாக ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகவே இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4