எரிபொருள் அதிகரிப்பினால் ’இ.போ.ச, ரயில் கட்டணம் அதிகரிக்காது’

#SriLanka
எரிபொருள் அதிகரிப்பினால் ’இ.போ.ச, ரயில் கட்டணம் அதிகரிக்காது’

போக்குவரத்து இராஜங்க அமைச்சர் சரத் அமுனுகம நேற்று எரிபொருள் விலை அதிகரித்திருந்தாலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.

15 தொடக்கம் 20 வீதம் வரையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்த போதிலும் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என்றார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் திடீரென பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

பஸ்களுக்கு நிவாரணம் வழங்க விசேட திட்டம் வகுக்கப்படுவதாகவும், எதிர்வரும் காலங்களில் நிவாரணப்பொதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!