ஒமிக்ரான் பாதிப்பால் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு!

கொரோனாவின் உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் பாதிப்பால் அமெரிக்காவில் முதன்முறையாக ஒருவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டெக்சாஸ் மாகாண சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 – 60 வயதுக்கு இடைப்பட்டவரே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடப்படாத காரணத்தினால், இவர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கடுமையான சிக்கல்களுக்கு முகம் கொடுத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்திற்கான தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்ட தொற்று நோயளர்களில் 73 வீதமானவர்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களிடையே உலகின் முதல் மரணம் கடந்த வாரம் இங்கிலந்தில் பதிவானது.
தற்போது ஒமிக்ரானுடன் தொடர்புடைய மரணங்கள் இங்கிலாந்தில் 12 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



