பட்டத்துடன் பறந்த இளம் குடும்பஸ்தர்: யாழில் சம்பவம்

#Jaffna
Mayoorikka
3 years ago
பட்டத்துடன் பறந்த இளம் குடும்பஸ்தர்: யாழில் சம்பவம்

பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றது.

பருத்தித்துறை - புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில்  பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் பட்டத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர். 

அப்போது, இரண்டாவது பட்டத்தின் 'முச்சை' கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.

சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர். 

சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட்டு  கீழே விழுந்தார்.

kite
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!