எரிவாயு சிலிண்டர்கள் மீண்டும் விநியோகிக்க ஆரம்பம்!
Mayoorikka
3 years ago
உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று முதல் மீண்டும் விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக லிட்ரே நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவகம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றினால், எரிவாயுத் தொகையைக் கொண்ட கப்பலொன்றுக்கு வழங்கிய அனுமதியையடுத்தே விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய முனையத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிவாயு கொண்ட மேலும் இரண்டு கப்பல்கள், இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.