சுன்னாகம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் விபத்து - இரு இளைஞர்கள் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
Thamilini
11 months ago
புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
