போராட்டத்தால் காணி அபகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தம்!

வலி. வடக்கு பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த போரட்டத்தில் பராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



