நாட்டில் மின்வெட்டு ஏற்படலாம்: இலங்கை மின்சாரசபை!
#Electricity Bill
Mayoorikka
3 years ago

எதிர்வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் மூன்றில் இரண்டு இன்னும் செயலிழந்த நிலையில் உள்ளதால் இந்த நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்து சரியாக ஏழு நாட்களின் பின்னர் கடந்த 10ஆம் திகதி 300 மெகாவோட் மின்னுற்பத்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.
ஆனால் மற்ற இரண்டு ஜெனரேட்டர்களும் இன்னும் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றை இயக்கும் வரை நாடு முழுவதும் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதென மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.மேலும் தெரிவித்துள்ளது.



