சினோவேக் தடுப்பூசி அபாயம் - ஆய்வில் தகவல்

‘ஃபைசர் பையோஎன்டெக்’, ‘மொடர்னா’ தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களைவிட சீனாவின் ‘சினோவேக்’ தடுப்பூசியை இரு முறை போட்டுக்கொண்டவர்கள், கொவிட்-19 தொற்றால் கடும் நோய்க்கு ஆளாகும் சாத்தியம் அதிகம் என்று தேசிய தொற்று நோய்களுக்கான நிலையம் (என்சிஐடி) அதன் ஆய்வில் கண்டறிந்துள்ளது.
சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசியை மூன்று முறை போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே தேவையான ஆதாரம் என்று என்சிஐடி அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. கடும் நோய் பாதிப்புக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி 90% செயல்திறனையும் மொடர்னா தடுப்பூசி 97% செயல்திறனையும் அளிக்கின்றன.
இருப்பினும், கடும் நோய் பாதிப்புக்கு எதிராக சினோவேக் தடுப்பூசிக்கு 60% செயல்திறன் மட்டுமே உள்ளது.
இவ்வாண்டு அக்டோபர் 1க்கும் நவம்பர் 21க்கும் இடைப்பட்ட காலத்தில் 1.25 மில்லியன் பேர் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது.



