கொரோனா விதியை மீறிய டச்சு அரச குடும்பம்

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரானின் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க கிறிஸ்துமஸ் கால விடுமுறையை முன்னதாக அறிவித்த நெதர்லாந்து பள்ளிகளை மூடியுள்ளது.
மேலும் நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 6 விருந்தினர்களுக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டச்சு அரச வம்சமான இளவரசி அமாலியாவின் 18வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் விதிமுறைகளை மீறி 21 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தகவல் பொதுமக்களிடையே பரவி பல்வேறு விமர்சனங்களை அரச குடும்பம் சந்தித்துள்ளது. இந்நிலையில் தங்கள் தவறுக்கு வருந்துவதாக டச்சு அரச குடும்பம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.



