பல்மேறா என சொன்ன டக்ளஸ் தேவானந்தா: ஹாஹா என சிரித்த சீன தூதுவர்!

#China
Mayoorikka
4 years ago
பல்மேறா என சொன்ன டக்ளஸ் தேவானந்தா: ஹாஹா என சிரித்த சீன தூதுவர்!

யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்திருக்கும் சீன தூதுவர் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.

இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது.

அங்கு நின்ற பனை மரத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் “பல்மேறா” என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.

இதில் ரொடி(கள்) கிடைக்கும். அற்ககோல் என சைகை மூலம் காண்பித்து இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்க படுத்தியபோது தூதுவர் அதற்கு ஹா ஹா என சிரித்த சம்பவம் இடம்பெற்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்த்த சீன தூதுவர் நல்லூர் ஆலயத்திற்கும் இந்து முறைப்படி கலாச்சார உடையணிந்து சென்று வழிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!