தமிழ்நாட்டில் மரக்கறி அமோக விளைச்சல். ஏற்றுமதி செய்யப்படுகிறது...!
#India
#Tamil Nadu
#Fruits
Mugunthan Mugunthan
3 years ago

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறி விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் (சௌ சௌ) விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு வெளிநாடுகளில் அதிக தேவை இருப்பதால் கூடலூரில் விளையும் மேரக்காய்களை (சௌ சௌ) மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
இடைத்தரகர்கள் இன்றி வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் அதிகபட்ச மார்க்கெட் விலையை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கிலோவிற்கு 25 ரூபாய்க்கு மேல் கிடைப்பதால் விவசாயிகள் நல்ல லாபம் பெற்று வருகின்றது.



