பிரித்தானியாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாரிய தீவிபத்து - ஒருவர் பலி - காணாமற்போனோர் பலர்

இங்கிலாந்தின் ரெடிங் (Reading) நகரில் குரோவ்லாண்ட்ஸ் வீதியில் (Grovelands Road) அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட ஏற்பட்ட தீயின் காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார், பலர் காயமுறுள்ளனர் மேலும் பலருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.
தேம்ஸ் வாலி போலீசார் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
31 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை, தீயிட்டது போன்ற குற்றங்கள் செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
போலீசார் மேலும் தெரிவிக்கையில் இந்த நிகழ்வு தீவிரவாத செயலாக சந்தேகப்படவில்லை என்றும் அருகில் உள்ள வீதிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Local agencies are working together at the scene of a large fire at a property in Grovelands Road, Reading.
— TVP Reading (@TVP_Reading) December 15, 2021
Our officers, as well as the fire and ambulance services, are at the site. Sadly, one person is believed to have died, and a number of others are unaccounted for. pic.twitter.com/vy3bAWf44k
நீங்கள் உங்கள் உறவுகள் தொடர்பில் ஏதேனும் கவலை இருப்பின் முதலில் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.



