பண்டிகைக் காலத்தில் பயணத் தடையா? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்து
#Festival
Mayoorikka
4 years ago
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
அதற்கமைய, பயணத்தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக அதிக சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.