இலங்கையில் இருந்து சவூதி அரேபியா சென்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்!
#SriLanka
#Airport
#Flight
Nila
4 years ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நோக்கி புறப்பட்ட விமானமொன்று, ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றிரவு மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட்டது.
விமானம் புறப்பட்டு 2 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களின் பின்னரே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
அதன்போது, குறித்த ஏ320 எயார்பஸ் விமானத்தில் 146 பயணிகள் மற்றும் 11 பணிகுழாம் உறுப்பினர்கள் உட்பட 156 பேர் இருந்துள்ளனர்.
கட்டுநாயக்கவில் இருந்து மாலை 5.45 க்கு புறப்பட்ட குறித்த இரவு 7.55 க்கு தரையிறக்கப்பட்டது.
எனினும், மற்றொரு விமானத்தினூடாக பயணிகளை மீள அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.