இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?
#SriLanka
Nila
4 years ago
எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியில் பல சிக்கல்கள் ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila)அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 420 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.