எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 4 பிள்ளைகளின் தாயாரின் இறுதிச்சடங்கு
எரிவாயு அடுப்பு வெடித்ததில் உயிரிழந்த குண்டசாலை நாட்டரன்பொதவில் தற்காலிகமாக வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயாரின் இறுதிக் கிரியைகள் வெல்கமுவ தேவகிரிய பொது மயானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
எரிவாயு அடுப்பு வெடித்து விபத்து ஏற்பட்டதை கண்டித்து உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்து வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.
இதேவேளைஇ நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
களுத்துறை - தெமட்டகஹவத்த, கெஸ்பேவ - விஹார மாவத்தை, ஹங்குரன்கெத்த - தமுனுமய, திருகோணமலை - புளியங்குளம் மற்றும் மாத்தறை - பொல்கஸ்வில, அனுராதபுரம், காலி ஆகிய பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அடுப்புகள் அணைக்கப்பட்ட சில நிமிடங்களில் அடுப்புகளில் பல வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பல எரிவாயு அடுப்புகளில் சமீபத்தில் வாங்கிய சிவப்பு மற்றும் வெள்ளை சீல் செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.