இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை !
Nila
3 years ago

இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
நிலநடுக்கத்தை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.



