ஜப்பானிய பிரதமரின் இல்லத்தில் பேய் உள்ளதா?

#world_news
ஜப்பானிய பிரதமரின் இல்லத்தில் பேய் உள்ளதா?

ஜப்பானில் கடந்த 1963-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் புகுந்த ராணுவ வீரர்கள் மந்திரி ஒருவர் உள்பட மூத்த அரசு அதிகாரிகள் பலரை சுட்டுக்கொன்றனர். 

அதன் பின்னர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தன. இதனால் சில பிரதமர்கள் அந்த அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.

அந்த வகையில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.

இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடோவிடம் பலரும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்க்கும்படி கூறினர்.

ஆனால் அதையும் மீறி புமியோ கிஷிடோ நேற்றுமுன்தினம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு குடி பெயர்ந்தார். அங்கு முதல் நாளை எப்படி கழித்தார் என்பது குறித்து நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் “நேற்று, இரவு நான் நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை” என கிண்டலாக கூறினார்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!