சூறாவளியின் சீற்றத்தை உணர வைத்த 79 வருட கால கறுப்பு வெள்ளை புகைப்படம்.
சென்ற வெள்ளிக்கிழமை கோரத் தாண்டவம் ஆடிய சூறாவளி இடம்பெற்ற Kentucky இலிருந்து 130 மைல் அதாவது 208 கிலோமீட்டர் அப்பாலுள்ள Indiana எனும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் ஜன்னலில் செருகியிருந்த புகைப்படத்தை ஓர் பெண்மணி எடுத்து பார்த்ததில் அந்த புகைப்படம், சூறாவளி வீசிய Kentucky இல் வீடு வாசல் அனைத்தையும் இழந்த ஓர் மூதாட்டி ஒருவரின் ஞாபக பொக்கிஷம் என தெரிய வந்துள்ளது. படத்தின் பின்னால் அவரின், அவர் கணவரின் பெயர்களும் புகைப்படம் எடுத்த ஆண்டும் ( 1942) எழுதப்பட்டுள்ளது .

வியப்பு என்னவென்றால், சூறாவளி கொண்ட சீற்றத்தின் வேகம்,பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு365 மைல் வேகத்தில் வீசியமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரம், இந்த அனர்த்தத்தில்.100 ஆண்டு கால பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமாகியுள்ளது .



