இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்புக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#Sri Lanka
Nila
1 year ago
இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்புக்கள் தொடர்பில்  வெளியான அதிர்ச்சி தகவல்!

சந்தையில் இதுவரை காலமும், ஆயிரம் ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது விலை பல மடங்காக அதிகரித்துள்ளது.

வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்கள் ஒரு மண்ணெண்ணெய் அடுப்பை 6 ஆயிரம், 7 ஆயிரம் ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை உட்பட நாட்டின் பல நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

நாட்டின் ஆங்காங்கே சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து, மக்கள் எரிவாயு அடுப்புக்கு மாற்றாக மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு