உலக மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட ரஷிய நிபுணர்!

#world_news #Corona Virus
Nila
3 years ago
 உலக மக்களுக்கு  மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட  ரஷிய நிபுணர்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் மனிதர்கள் மீதான தாக்கம் முடிவுக்கு வருகிறது என ரஷிய நிபுணர் கணித்துள்ளார்.
 
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். 

மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இந்த அறிவிப்பானது உலக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!