அமெரிக்காவில் பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியர்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கிழக்கு கொலம்பஸ் நகரில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் குமார் படேல் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலுமு் தெரிய வருகையில்,
45 வயதான இவர் நேற்று முன்தினம் காலை வங்கியில் பணத்தை வைப்புச்செய்வதற்காக தான் பணிபுரியும் நிலையத்துக்கு அருகில் உள்ள வங்கிக்குச் சென்றார்.
அவரைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அமித் குமார் வங்கிக்குள் நுழைவதற்கு முன் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பின் அந்த மர்ம நபர் அமித் குமார் வங்கியில் வைப்புச்செய்ய வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே பெரும்சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.



