மணிப்பூரக சக்கரா தியானம்

Prasu
2 years ago
மணிப்பூரக சக்கரா தியானம்

நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

பத்து முறைகள். பின் உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும்.


உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி வயிற்று உள் உறுப்புகளில் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் காலை / மாலை இவ்வாறு தியானிக்கவும்.

பய உணர்வால் பிராண சக்தி உடல் முழுவதும் சரியாக செல்லாமல் இருக்கும். இந்த மணிப்பூரக சக்கரா தியானத்தால் பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும். மனோ பயம் நீங்கும். மன தைரியம் கிடைக்கும். நேர்முக எண்ணங்கள் வளரும்.

இதயத்துடிப்பு சீராகும். உடல் முழுக்க இந்தப் பகுதியில் சக்தி ஓட்டம் குறைவாக இருந்தாலும் மணிப்பூரக சக்கரா தியானம் தொடர்ந்து ஐந்து நிமிடம் தினம் செய்தாலே உடல் இயக்கம், மனோ இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே தினமும் இடைவிடாமல் காலை / மாலை இந்த தியானத்தை செய்யுங்கள்.