ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா!
Prabha Praneetha
3 years ago

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சசிசலா, அவரை சந்தித்து பேசினார். அப்போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் திரைப்படத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் பெற்றிருந்தார்.
அதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சசிகலா சென்றதாக செய்திகள் வெளியானது.
என்றாலும், அரசியலை விட்டு ஒதுங்கி திரைப்படங்களில் மட்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



