பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.

#world_news #UnitedKingdom #Travel
பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.

கொரோனா தொற்று புதிதாக பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

அதன்படி நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகளுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சின் செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்தார்.

அதன்படி 12 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவரும் புறப்படுவதற்கு அதிகபட்சம் 48 மணிநேரத்திற்கு முன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் நாட்டுக்கு வந்த இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதை கண்டறியும் வரையே தனிப்படுத்தல் கட்டுப்பாடு இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து அரசாங்கமும் பயணக்கட்டுப்பாடுகளை வலுவாக்கியுள்ளதாக தெரியவருகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!