ஆஸ்திரேலியாவில் ரூ.15.6 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு - அப்படி என்ன ஸ்பெஷல்?

#world_news
Nila
3 years ago
ஆஸ்திரேலியாவில் ரூ.15.6 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு - அப்படி என்ன ஸ்பெஷல்?

விலங்குகளை ஏலம் விடுவது என்பது ஒரு புதிய விஷயம் இல்லை. பல நாடுகளில் தேவைக்கேற்ப அல்லது மக்கள் வளர்க்க விரும்பும் பல விலங்குகள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரை சில முக்கிய பண்டிகைகளின் போது ஆடுகள் ஏலத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது. இதனிடையே மார்ரகேஷ் (Marrakesh) என்ற ஆடு ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 21,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15.6 லட்சத்திற்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள கோபார் (Cobar) நகரில் ஏலம் நடந்தது. இது முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த ஏலமாக இருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து அந்த ஆட்டை வாங்கியவரின் பெயர் ஆண்ட்ரூ மோஸ்லி (Andrew Mosley). தான் இவ்வளவு செலவழித்து ஏலத்தில் எடுத்துள்ள Marrakesh ஆடு மிகவும் ஸ்டைலாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்னதாக ப்ரோக் (Brock) என்ற பெயருடைய ஆடு இந்திய மதிப்பில் ரூ.6.40 லட்சத்துக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது.

ஏனென்றால் மோஸ்லி மாடு பண்ணை ஒன்றை வைத்து இருக்கிறார். அந்த பண்ணையில் ஆட்டுக்குட்டிகள், ஆடுகள் மற்றும் சில கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். Marrakesh ஆட்டை ஏன் இவ்வளவு விலை கொடுத்து ஏலத்தில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை ஆண்ட்ரூ மோஸ்லி கூறி இருக்கிறார். Marrakesh ஏன் விலை உயர்ந்தது என்றால் அவற்றின் இனம் மிக அரிதானது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


தற்போது ஆண்ட்ரூ மோஸ்லி ரூ.15.6 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கும் மார்ரகேஷ் ஆடு, குயின்ஸ்லாந்து எல்லைக்கு அருகில் வளர்க்கப்பட்டது. Cobar-ல் நடந்த விற்பனையின் போது இந்த இனத்தைச் சேர்ந்த 17 ஆடுகள் மட்டுமே இருந்தன. தான் தற்போது வாங்கி இருக்கும் ஆடு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால், நல்ல கருவுறுதல் விகிதத்தை (good fertility rate) கொண்டிருக்கும் என்று தான் கருதியதாக குறிப்பிட்டார். எனவே தான் அதை வாங்கியதாகவும் ஆண்ட்ரூ மோஸ்லி கூறி இருக்கிறார்.

முந்தைய சாதனையான Brock-ன் ஏலத்தை முறியடிக்கும் வகையில் இந்த ஏலம் இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனலத்தை விட இரு மடங்கு விலையில் ஏலம் முடியும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் ஆண்ட்ரூ மோஸ்லி. கோபாருக்கு தெற்கே 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள எட்டிவாண்டா ப்ராப்பர்ட்டியில் (Etiwanda property) ஆண்ட்ரூ மோஸ்லி தனது கால்நடைகள், செம்மறி ஆடு, ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆடுகளை வளர்க்கிறார்.

மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அந்த ஆடு தற்போது மேற்கு நியூ சவுத் வேல்ஸில் புதிய காலநிலை மற்றும் சூழலுக்கு பழகுவதற்காக அதன் சொந்த நேரத்தை எடுத்து கொள்கிறது. மேலும் காட்டு விலங்குகளிடமிருந்து தனது மந்தையை பாதுகாக்க ஒரு வேலியையும் சுற்றி கட்டியுள்ளார் மோஸ்லி. Marrakesh போன்ற ஆடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் விலை அதிகம் என்று கூறியுள்ள மோஸ்லி, இறைச்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தரமான ஆடுகளை வளர்க்க இப்பகுதி விவசாயிகள் விரும்புகின்றனர் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!