ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை வழங்கி விஷேட நீதிமன்றம் உத்தரவு!

#Court Order
Mayoorikka
3 years ago
ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை வழங்கி  விஷேட நீதிமன்றம் உத்தரவு!

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியான்மர் நாட்டு தலைவி ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு விஷேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மர் விஷேட நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, இந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும், இராணுவம் அதிகாரத்தை பலப்படுத்தும் அதே வேளையில் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதில் இருந்து நோபல் பரிசு பெற்றவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!