அதி சிறந்த ஊக்கி ( BOOSTER) தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட தகவல்
கொரோனா தடுப்பூசிகளான Pfizer " ( பைசர் ) , " Moderna ( மொடேனா ) ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் அதி சிறந்த ஊக்கி ( BOOSTER) தடுப்பு திறனை உடலில் ஏற்படுத்துவதாக இங்கிலாந்தின் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டு உள்ளனர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது BOOSTER தடுப்பூசி தெரிவில் இந்த இரண்டு ஊசிகளும் மிக சிறந்த பயன்பாட்டை தரக் கூடியதாக உள்ளவை என , முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆயிரக்கணக்கானவர் மத்தியில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பைசர் மற்றும் மோடோனா ஆகிய இரு தடுப்பூசிகளும் தடுப்பூசி விடயத்தில் உடலில் நோய் எதிர்ப்பு திறனையும் அதே வேளை, நோய் எதிர்ப்பு திறன் பணியில் மையமாக செயல்படும் T Cells எனப்படும்,
வெண் குருதி அணுக்களுக்கு " ஊக்கம் தரும் திறனை கொண்டவை என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .இதே நேரம், தற்போது அச்சுறுத்தி வரும் OMICRON வகை கிருமி பரவலுக்கும் இந்த இரண்டு தடுப்பூசி BOOSTER தகுந்த மருத்துவ பலனை கொடுக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, " SOTROVIMAB " எனப்படும் 500mg அளவுள்ள கொரானா மாத்திரை, கொரானா அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவதையும் , உயிரிழப்பு ஏற்படுவதையும் 79 % தடுக்க கூடிய திறன் கொண்டது எனவும் இன்னொரு மருத்துவ ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.