மீண்டும் கதிகலங்க வைக்கும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் - திரைப்படமாக 1963-ல் வெளிவந்ததா ....?

Nila
3 years ago
மீண்டும் கதிகலங்க வைக்கும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் -  திரைப்படமாக 1963-ல் வெளிவந்ததா ....?

தற்போது அனைத்து ஊடகங்களிலும் உருமாறிய `ஒமிக்ரான்' கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்தான் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில், `தி ஒமிக்ரான் வேரியன்ட்' என்கிற திரைப்பட போஸ்டர் ஒன்று, சமூக வலைதளங்களில் உலகம் முழுக்க வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ``இது 1963-ல் வந்த படம். இதிலிருக்கும் டேக்லைனை கவனியுங்கள்'' என்று பதிவிட்டிருந்தார். அந்தப் போஸ்டரிலிருந்த டேக்லைனில், `பூமி கல்லறையாக மாறிய நாள்' என்றிருந்தது.


ராம் கோபல் வர்மாவைத் தொடர்ந்து, இந்திய நெட்டிசன்கள் பலரும் இந்தப் போஸ்டரை பகிர்ந்துவருகின்றனர். இந்த நிலையில், `இது உண்மைதானா... இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா?' என்கிற விவாதங்களும் சமூக வலைதளங்களில் கிளம்பியிருக்கின்றன.

இந்தப் போஸ்டரின் உண்மைத்தன்மை குறித்துத் தெரிந்துகொள்ள, `The Omicron Variant' எனக் கூகுளில் தேடுகையில்,  பெக்கி (Becky Cheatle) என்ற ஐரிஷ் இயக்குநரின் ட்விட்டர் பதிவு ஒன்று கிடைத்தது. நவம்பர் 28-ம் தேதி போடப்பட்ட அந்தப் பதிவில், ``70-களில் வெளியான சில அறிவியல் படங்களின் போஸ்டரில் `தி ஒமிக்ரான் வேரியன்ட்' என்ற வாக்கியத்தை டைட்டிலாக இணைத்து ஃபோட்டோஷாப் செய்திருக்கிறேன்'' என்று பதிவிட்டு மூன்று படங்களைப் பகிர்ந்திருந்தார்.


தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி அன்று, ``ஸ்பானிஷ் மொழி ட்விட்டர் பக்கங்கள் சிலவற்றுள், நான் செய்த போஸ்டர் ஒன்று `கோவிட் புரளிக்கான ஆதாரம்' என்று பகிரப்பட்டுவருவதாக அறிந்தேன். `ஒமிக்ரான் வேரியன்ட்' என்பது 70-களில் வந்த சில அறிவியல் படங்களுக்குப் பொருந்தும் டைட்டில் போல இருந்ததால் அப்படி ஃபோட்டோஷாப் செய்தேன். எனது முட்டாள்தனம் இது. அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்று பெக்கி ட்வீட் செய்திருந்தார்.


1974-ல் வெளியான `Sucesos En La IV Fase' என்கிற ஸ்பானிஷ் படத்தின் போஸ்ட்ரை, `தி ஒமிக்ரான் வேரியன்ட்' என டைட்டில் மாற்றி ஃபோட்டோஷாப் செய்திருந்தார் பெக்கி. அந்தப் போஸ்டர்தான் உலகம் முழுக்க வைரலானது. ஆனால், அப்படி ஒரு படம் வெளியாகவில்லை என்பது  தெரியவந்தது.

ஒமிக்ரான் - இத்தாலியப் படமா?

மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், `ஒமிக்ரான்' என்று பெயரிடப்பட்டிருந்த வேறொரு படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தப் படம் குறித்துத் தேடுகையில், அது 1963-ல் வெளியான இத்தாலி நாட்டுத் திரைப்படம் என்பது நமக்குத் தெரியவந்தது. ஆனால், அது வைரஸ் தொற்று தொடர்பான படம் இல்லை. தொழிற்சாலையில், உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் உடலை ஒரு வேற்றுக்கிரகவாசி எடுத்துக் கொண்டு செல்வது போன்றும், பின்னர் அந்த தொழிலாளி மீண்டும் உயிர் பெறுவது போன்றும் அந்தப் படத்தின் கதை அமைந்திருக்கிறது. அதேபோல 2013-ம் ஆண்டில், `The Visitor from Planet Omicron' என்ற படம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. இந்தப் படமும் வைரஸ் தொற்று பற்றிப் பேசவில்லை.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸின் வேரியன்ட்களுக்கு கிரேக்க எழுத்துகளின் அடிப்படையில் பெயர் சூட்டிவருகிறது. அந்த வகையில், 15-வது கிரேக்க எழுத்தாக இருக்கும் `ஒமிக்ரான்' என்பதை, தற்போதைய வேரியன்ட்டுக்கு வைத்திருக்கிறது.

`ஒமிக்ரான்' என்பது கிரேக்க எழுத்து என்பதால், இதே பெயர் இரண்டு படங்களின் டைட்டிலில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அந்தப் படங்களின் கதைகளுக்கும், வைரஸ் தொற்றுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அதேபோல சமூக வலைதளங்களில், `தி ஒமிக்ரான் வேரியன்ட்' என வைரலான போஸ்டரும் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலியான போஸ்டர்தான் என்பதும் தேடலில் கண்டறியப்பட்டிருக்கிறது.

எது என்னமோ ஒமிக்ரோன் என்பது மீண்டும் உலகத்தைக் கதிகலங்கடிக்கப்போகும் ஒரு வைரஸ் என்பது யாராலும் மறுக்க முடியாத

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!