தமிழுக்கு பிரித்தானியா அழித்த அங்கீகாரம்

#UnitedKingdom
Keerthi
4 years ago
தமிழுக்கு பிரித்தானியா அழித்த அங்கீகாரம்

தமிழுக்கு பிரித்தானியா அழித்த அங்கீகாரம். உலகதமிழர்களுக்கு இன்னும் ஒரு அங்கீகாரம்.
உலகத்தின் மூத்தமொழி தமிழ் என்பதை வெள்ளைக்காரனே கூறுகிறான்.
ஆம் ஒரு அமெரிக்க மொழி ஆய்வாளர் தனது ஆய்வில் கூறியதும் அது உலக மொழி ஆங்கிலத்தில் வெளிவந்ததும். நாம் அறிந்த விடயம்.

அதை அங்கீகரிக்கும் வண்ணம் பிரித்தானிய தலைநகர் லண்டனில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், அதை ஒண்றியுள்ள கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமை நாள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் நகரப்பேர‌வையில் இன்று ஏகமனதாகவும் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை செய்து முழுமனதோடு பல அதிதிகளின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு உலக அரங்கில் தமிழ் வரலாற்று பதிவுக்கு புதிய இரத்தமாகும்.

இப்பேரவையில் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை எதிர்வரும் தைமாதம் முதல் கடைப்பிடிக்கப்படும் வகையில் ஒரு செயற்திட்டத்தை உருவாக்கும் வகையில் ஒரு வரலாற்றுத்தருணம் உருவாகியுள்ளது.

லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையின் நூறுவீதஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த பிரேரணை மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வருடம் ஜனவரி மாதத்திலும் லண்டன் பெருநகரப்பிராந்தியத்தில் தமிழ் மரபுத் திங்கள் கடைப்பிடிக்கும் வகையிலான சாத்தியப்பாடுகள் உருவாகியுள்ளன.

லண்டன் பெருநகர அவையின கென்சவேட்டிவ் உறுப்பினர் நிக் றொஜர்ஸ் அவர்களால் இன்று பிற்பகல் இந்தபிரேரணை முன்மொழியப்பட்டு அதன் பின்னர் இது விவாதத்துக்கு விடப்பட்டிருந்தது.

விவாதத்துக்குப் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கான ஆதரவினைத் தெரிவித்து, ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அதாவது Tamil Heritage Month ஆக பிரகடனப்படுத்தும் பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான பேச்சுக்களும் செயற் திட்டங்களும் நகர்த்தப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நர்வுகள் வெற்றியளித்தால் ஜனவரி மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வகையிலும் அதனை பகிரும் வகையிலும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுமென எதிர்பார்க்ப்படுகின்றது.

இந்த உறுதிமொழியால் உலகத்தமிழர்களுக்கு உலக நாடுகளிடயே மற்றும் ஒரு அங்கீகரமாக அனைத்து தமிழ் ஆதரவாலளர்களும் கருதுகிறனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!