பஸ் கட்டணங்கள் அதிகரிப்பா? அமைச்சர் வெளியிட்ட தகவல்
#Bus
#PrimeMinister
Mayoorikka
4 years ago
நாட்டில் தற்பொழுது உள்ள பொருளாதார நெருக்கடியில் அவசரஅவசரமாக பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாது என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்திலிருந்து பஸ் கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் பதில் அளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாளாந்தம் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள நேரத்தில் அவசரஅவசரமாக பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
பஸ்களுக்காக நிவாரணங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதால், அதற்கான விசேட நிவாரண பெக்கேஸ் எதிர்வரும் நாள்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.