லண்டனில் மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ள புதிய இறுக்கமான விதிமுறைகள்
பிரித்தானியாவில் புதிய பிறழ்வு பெற்ற ஒமிகிரோன் வைரஸ் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் வாரத்தில் இருந்து பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகமாகிறது.
இந்த விதிமுறைகளின் படி கடைகள், மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
மேலும், பிரித்தானியாவுக்குள் நுழையும் ஒவ்வொருவரும் பிசிஆர் செய்யவேண்டும், மேலும் புதிய வைரஸ் தொற்றியவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்களுக்கு சுயதனிமை படுத்தவேண்டும், முழுமையாக தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டு இருந்தாலும் இது பொருத்தும். நாட்டுக்குள் நுழைந்து இரண்டு நாட்களுக்குள் எடுக்கவேண்டும், அவ்வாறு எடுத்தபின்னர் கோவிட் தொற்று இல்லை என்று உறுதியாகும் வரை சுயதனிமை படுத்த வேண்டும்.
அதேவேளை இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சென்ற வருடத்தை விட சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கையாக தாற்காலிகமாக எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
கடந்த புதன் கிழமை தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய பிறழ்வு பெற்ற இந்த ஒமிகிரோன் வைரஸ் அதி உயர் மீள்பரவும் திறன் கொண்டது.
இஸ்ரேல், இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த புதிய வைரஸ் பரவி இருப்பதாக தெரியவருகிறது.