கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி

Keerthi
4 years ago
கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி

பெரு நாட்டில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர்  பதப்படுத்தப்பட்ட மனித உடல், ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள் இருந்தே இம்மம்மியானது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  குறித்த மம்மியானது அதன் கைகள் மற்றும் கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும், அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்லா மலைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகால மக்களிடைய, இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம், நடைமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள மம்மியின் , துல்லியமான காலத்தை அறிந்திடும் வகையில், ரேடியோ கார்பன் முறையில் பரிசோதிக்க, தொல்பொருள் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!