எதிர்ப்பு மருந்துகள் எடுப்பது தொடர்பில் இங்கிலாந்து சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
"மன அழுத்தம்"(Depression) பிரச்சனை இலேசாக உணரும் கால கட்டத்தில் மன அழுத்த எதிர்ப்பு மாத்திரைகளை (antidepressants) உடனடியாக எடுக்கும் பழக்க வழக்கத்தை கைவிடுமாறு இங்கிலாந்தின் உயர் மருத்துவ சுகாதார அமைப்பு NICE( The National Institute for Health & Care Excellence)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
மாறாக, மன அழுத்தம் இலேசாக தெரியும் அல்லது அறிகுறிகள் உணரும் பட்சத்தில் முதலில் உடற்பயிற்சிகள் (Exercise) , தியானம் ( Meditation) மற்றும் ஆற்றுப்படுத்தும் ஆலோசனை
(Counselling) போன்றவை நல்ல பலனை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
"கொரோனா" காலப் பகுதியில் மன அழுத்தம், மக்களின் மன நிலையில் பெரும் தாக்கத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கும் அந்த அறிக்கையில்,
2020 ம் ஆண்டு ஐப்பசி தொடக்கம் மார்கழி வரையுள்ள 3 மாத காலத்தில் இங்கிலாந்தில் மட்டும் 20 மில்லியன் மக்கள், மன அழுத்த எதிர்ப்பு மாத்திரைகள் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது, 2019 ம் ஆண்டு இதே காலப்பகுதி உடன் ஒப்பிடுகையில் 6 % அதிகம் எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண அறிகுறிகள் தென்படும் சூழ்நிலையில், எதிர்ப்பு மருந்துகள் எடுப்பது சரியான தீர்வாக அமையாது எனவும், அதைவிட , உடற்பயிற்சி, தியானம், ஆலோசனை என்பவை சிறந்த நல்ல
பலனை தரக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் ஆய்வுகள் வெளிபடுத்தி உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடுமையான மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவற்றினால் அவதிப்படுபவர்களுக்கு , சிகிச்சை மாத்திரைகள் அவசியம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது எனவும் குறிப்பிடப்படுள்ளது .