12 வயது சிறுமிக்கு தனது நாட்டில் விசேட குடியுரிமை வழங்கிய இத்தாலி
அகதி முகாமில் ஆதரவு தேடி இருந்த 12 வயது சிறுமியின் முறைத்த பார்வை
அல்லது துளைக்கும் பார்வை அவளை இன்று மேல் நாட்டின் இத்தாலியில் விசேட மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது .
1984 ல் ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் இருந்த சமயம், உலகப்புகழ் பெற்ற NATIONAL GEOGRAPHIC என்ற சஞ்சிகை நிருபரின் கமராவுக்குள் இவளது அபூர்வமான பார்வை சிக்கிக் கொண்டது.
மில்லியன் கணக்கில் வெளிவரும் விலை கூடிய அந்த சஞ்சிகையின் முகப்பு படமாக இவளது படம் வெளிவந்து உலகம் முழுவதும் இவள் பிரபலமானாள்.
இன்று ( 2021 ம் ஆண்டில்) 50 வயதை எட்டும் SHOBAT GULLA எனும் பெயரை உடைய அந்த பெண், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்தவுடன் உலகத்திடம் ஆதரவு கரம் நீட்டினாள்.
அதை ஏற்றுக் கொண்ட இத்தாலி நாடு அவரை விசேட விமானத்தில் வரவழைத்து தனது நாட்டில் விசேட குடியுரிமை வழங்கி உள்ளது.
ஆம், ஏழ்மையின் பார்வையில் இறைவன் வாழ்கிறான் என்பதை நான்
நினைத்துப் பார்க்கிறேன்.