ரஷ்ய நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 52 பேர் பலி!
ரஷ்யாவில் சைபீரிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 52 பேர் பலியாகினர்.
ஒரு தசாப்தத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்கப் பேரழிவு சம்பவம் இதுவாகும்.
மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 3,500 கிமீ (2,175 மைல்) தொலைவில் உள்ள கெமெரோவோ பகுதியில் அமைந்துள்ள Listvyazhnaya என்ற சுரங்கத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சுரங்கத்தில் 285 பேர் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர், ஆனால் டஜன் கணக்கானவர்கள் சுரங்கத்தின் தொலைதூரப் பகுதியில் நிலத்தடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ராய்ட்டர் செய்தி மேலும் தெரிவிக்கையில் இது தொடர்பாக 3 பேர் சுரங்க குறைபாடு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது