நடிகர் கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை !
Prabha Praneetha
3 years ago

சமீபத்தில் நடிகர் கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும், பின் பரிசோதனைக்கு பின் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகிறார்.
இந்நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் "கமலுக்கு தற்போது கொரோனா தொற்றிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளனர்.



